Categories
சினிமா

“இது மிகப்பெரிய ஒரு பரவசத்தை உருவாக்கும்”…. டிரைக்டர் மோகன்.ஜி வெளியிட்ட பதிவு…!!!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து இவர் இயக்கிய திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றதோடு, சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்கிவரும் பகாசூரன் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

“பகாசூரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் பாடல் பற்றிய அப்டேட்டை இயக்குனர் மோகன்.ஜி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவற்றில் “என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா என தொடங்கும் வரிகள் கொண்ட பாடல் விரைவில் வெளியாகும். மிகபெரிய ஒரு பரவசத்தை இப்பாடலின் இசை உருவாக்கும். செல்வ ராகவன் சார் நடிப்பில், நடனத்தில் அசத்தியிருக்கிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |