Categories
அரசியல்

“இது பெரும் பேரிழப்பாக அமையும்”…. திட்டத்தை கைவிடுங்கள் பிரசார் பாரதி…. கடிந்த அன்புமணி ராமதாஸ்…!!

சென்னை ஏ அலைவரிசை ஒலிபரப்பை நிறுத்தும் திட்டத்தை பிரசார்பாரதி அமைப்பு கைவிட வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் கூறியுள்ளார்.

சென்னை ஏ அலைவரிசையில் இசை, குடும்ப நலம் உட்பட பலவகை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சென்னை ஏ அலைவரிசை ஒளிபரப்பை பிரசார்பாரதி அமைப்பு நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அண்மையில் சென்னை வானொலி நிலையத்தின் இரு அலைவரிசைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சென்னை ஏ அலைவரிசை ஒலிபரப்பு நேற்றுடன் மூடப்படயிருந்துள்ளது. ஆனால் தொழில்நுட்ப கோளாறால் அது முடியாததால் எந்நேரமும் சென்னை ஏ அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரசார் பாரதி மத்திய மற்றும் சிற்றலை ஒலிபரப்பை மூடும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை ஏ அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால் அது சென்னை வானொலி நிலைய ரசிகர்களுக்கு பெரும் பேரிழப்பாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |