ஆபாச வீடியோக்களை வெளியிட்ட 63 இணையதள நிறுவனங்களை முடக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தற்போது பெண்களுக்கு எதிராக நிறைய இணையதளங்கள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களை முடக்க வேண்டும் என உத்தரகாண்ட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசத்தை பரப்பும் வகையில் செயல்படும் 63 இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று அனைத்து இணையதளங்களையும் முடக்க அந்தந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.