ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் டிச.29இல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் குறித்து அறிவுறுத்தல் செய்யவுள்ளார்.