Categories
தேசிய செய்திகள்

“இது புதுவிதமான யோசனையா இருக்கே”…? பிரிக்கும்போது சண்டை வராமல் இருக்க சாக்லேட்டிற்கும் அளவுகோல்… வைரலாகும் தகவல்…!!!!

சாக்லேட் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், சாக்லேட்டை அதிகம் விரும்பாதவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒரே சாக்லேட்டை பகிர்ந்து கொள்ளும் போது எந்த விதமான பிரச்சினையும் இரு வராமல் இருப்பதற்காக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது ட்விட்டரில் ஒரு சாக்லேட் பாக்கெட் பற்றிய தகவல் வைரலாக பரவி வருகிறது அதில் சாக்லேட் பாருக்குள் எக்ஸ்எஸ், எக்ஸ்எல், எஸ்,எல் என் விதவிதமான அளவுடன் பார்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கோடடட் டேக்ஸ் என்ற பிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலருக்கும் பலவிதமான விருப்பங்கள் இருக்கும்.

அப்படி இருக்கும் போது சாக்லேட் அளவுகள் மட்டும் ஏன் ஒன்று போல் இருக்க வேண்டும் விருப்பங்களுக்கு தகுந்தார் போல் அளவுகளும் மீறாமல் சாக்லேட்டுகளை பிரிக்கும் போது எந்த சண்டையும் சச்சரவும் வராமல் தடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர் சாக்லேட் காதலர்கள். இது மிகவும் புதுவிதமான யோசனை என பலரும் கொண்டாடி வருகின்றார்கள் எப்படி இருந்தாலும் ஒரு சாக்லேட் முழுவதையும் நானே சாப்பிடுவேன் அப்படி இருக்கும் போது இதெல்லாம் எதுக்கு என சாக்லேட் விரும்பிகள் சிலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |