கிறிஸ்தவ பள்ளிகள், பள்ளிகள் போல் அல்லாமல் மதமாற்றும் கேந்திரங்கள் போல் செயல்படுவதாக எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுவர்கள் ருத்ராட்சம், திருநீர் அறிந்திருந்த காரணத்தினால் ரவுடி போல இருப்பதாக கூறி ஆசிரியர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அரியலூர் மாணவி உயிரோடு இருந்திருப்பார். அரியலூர் மாணவியை குறிப்பிட்ட அந்த பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மாணவியை இழிவாக நடத்தியதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த மாணவியின் தற்கொலைகாண காரணம் குறித்து ஒரு வாரத்தில் கண்டறிவோம் என காவல்துறை எஸ்பி கூறியுள்ளார். அதோடு மதமாற்ற நிர்ப்பந்தம் மாணவியின் மரணத்திற்கு காரணம் இல்லை எனவும் கூறியுள்ளார் விசாரிக்காமலேயே அதை எப்படி காரணமில்லை என கூற முடியும்..? எனவே இந்த எஸ்பிஐ உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கிறிஸ்தவ பள்ளிகள், பள்ளிகள் போல் செயல்படாமல் மதமாற்றம் செய்யும் கேந்திரங்களாக செயல்பட்டு வருகின்றன இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். எனவே இந்தியாவில் மதமாற்ற தடை சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.