ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஜி 7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பை பிரபல நாடான ஜெர்மனி ஏற்றுள்ளது. இதனால் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னாலெனா போர்பாக் இந்தியாவிற்கு வருவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்த அவர் கூறியதாவது “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ளது. மேலும் பல்வேறு உள் சமூக சவால்கள் இருக்கிறது. ஆனால் இந்தியா பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
மேலும் உக்ரைன் ரஷிய போருக்கு எதிராக ஜி20 உள்ளது. மேலும் நான் ஜி 7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் இந்தியாவிற்கு வருவேன். அப்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை பராமரித்தல் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்” என அவர் கூறியுள்ளார்.