இங்கிலாந்தின் தலைநகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் வேலை எதுவும் செய்யாமல் தினந்தோறும் 160 பவுண்டு வரை சம்பாதிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரில் 31 வயதுடைய வரலாற்று கதை ஆசிரியரான ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் வேலை எதுவும் செய்யாமலேயே 160 பவுண்டு வரை சம்பாதிக்கிறார்.
அதாவது ரெட்டி ஒரு நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுப்பது உட்பட வரிசையில் நிற்க முடியாத பணக்காரர்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தினந்தோறும் 160 பவுண்டுகள் வரை அவர் சம்பாதிக்கிறார்.
இதுகுறித்து ரெட்டி அளித்த பேட்டியின்போது, நான் தினந்தோறும் 8 மணி நேரம் வரிசையில் நிற்பதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி தான் ஒரு எழுத்தாளர் என்பதால் தனக்கு எழுதவும் நேரம் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.