வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கூறியுள்ளார்.
திருச்சியில் என்ஐடி கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ஒவ்வொரு மாணவரும் கேள்விகளை கேட்க அவர்களுக்கு கமலஹாசன் பதில் அளித்தார். அப்போது வெற்றி தோல்வி இரண்டும் எனக்கு ஒன்றுதான். வெற்றி பெறாத படங்களுக்கும் நான் உழைத்து உள்ளேன். அரசியல் என்பது உங்களுடைய கடமை. அது தொழில் அல்ல. வாக்களிக்க வயது வந்தும் பலர் வாக்காளர் பட்டியலில் பெயரை கூட சேர்க்காமல் இருக்கிறார்கள்.
முதலில் வாக்களிப்பதற்கான வயது வந்துவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து விடுங்கள். வாக்களிப்பது ஜனநாயக கடமை. அதை செய்யாவிட்டால் கேள்வி கேட்ட உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம். அரசியல் என்பது நமது கடமை. அது தொழில் அல்ல என்றார். வாக்களிக்கும் வயது வந்தவர்கள் பலர் வாக்களிப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்த அவர், ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முத்தமான வாக்களிப்பதைத் தவறாமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.