நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் உபேந்திரா திபாரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில, பெட்ரோல் டீசல் விலையை உண்மையாக பார்த்தால் அதை உயரவே இல்லை. 2014 ஆம் ஆண்டில் தனிநபர் வருவாய் இருந்ததைவிட இப்போது அதிகமாக இருக்கிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பை பொருட்படுத்த வேண்டியது கிடையாது. தற்போது மக்கள் குறைவாக தான் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவை இல்லை. ஆளுங்கட்சி மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.