Categories
உலக செய்திகள்

இது தான் அமெரிக்காவின் ஜனநாயகம்…!!

அமெரிக்காவின் ஜனநாயகம் வெவ்வேறாக இருக்கிறது என்று இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் புகுந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் ஆயுதங்களுடன் வந்த அவர்கள் வாஷிங்டன் வீதிகளிலும் அச்சுறுத்தலாக நடமாடியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் இதுவரை 8 பேர் கைது செய்துள்ளது. ஆனால் அப்பாவி கருப்பின இளைஞரை கழுத்தை மிதித்து கொலை செய்ததை தட்டிக்கேட்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதுதான் அமெரிக்காவின் ஜனநாயகம்.

Categories

Tech |