சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சின்னம்பாளையம் பகுதியில் நல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சம்பத்(52), குன்னமலையை சேர்ந்த சுந்தர்ராஜ்(23), தீக்குச்சி காட்டை சேர்ந்த நந்தகுமார்(44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.