Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது ஜெர்ஸியா…. “இல்ல தர்பூசணி பழமா?”….. டவுட்டா இருக்கு…. கிண்டல் செய்யும் இந்திய ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரால் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 20 முதல் (இன்று) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரின் போது இந்திய அணி இந்த ஜெர்சியை முதன்முறையாக அணிந்து விளையாடுகிறது.

மேலும் செப்டம்பர் 28 முதல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அதன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் புது ஜெர்சியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள். மறுபுறம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிமுகம் செய்தது. இதையடுத்து பரம எதிரியான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய ரசிகர்களால் இந்த ஜெர்சியை பார்த்துவிட்டு தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை மற்றும் இந்திய ஜெர்சியுடன் ஒப்பிடும்போது இது என்ன டிசைன் என்பது போல ட்ரோல் செய்யத் தொடங்கினர். அதாவது அவர்கள் தர்பூசணி பழம் போல இருப்பதாகவும், சென்டர் ஃப்ரூட் மிங்கில் போல இருப்பதாகவும் கலாய்த்து வருகின்றனர்..

https://twitter.com/mparveeez7/status/1571518023944769537

 

டி20 உலகக் கோப்பை அணி:

பாபர் அசாம் (கே), ஷதாப் கான் (து.கே), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அஃப்ரி , ஷான் மசூத், உஸ்மான் காதர்.

காத்திருப்பு வீரர்கள் :

ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி

https://twitter.com/only4Virat/status/1571533704115408902

https://twitter.com/Vishal_dhoni07/status/1571535505438937089

Categories

Tech |