உலக அளவில் சூரியகாந்தி எண்ணெயின் ஏற்றுமதி உக்ரைன் மற்றும் ரஷ்யா 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கை காரணமாக சமையல் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளிள் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளத. போர் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் சமையல் எண்ணெய் இல்லை. மேலும் பல கடைகளில் சமையல் எண்ணெய்கள் கெடுபிடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க ஜெர்மனியின் முனிச் நகரில் ஜிசிங்கர் பார் மேலாளர்கள் சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்யை கொடுத்து, அதே அளவு பீரை வாங்கிக்கொள்ளலாம். வெளிச்சந்தையில் 1 லிட்டர் பீர் விலை 7 யூரோக்கள். ஆனால், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை 4.5 யூரோக்கள் என்பதால், அங்கு இந்த சிறப்பு சலுகைக்காக வாடிக்கையாளர்கள் பாரில் குவிந்து வருகின்றனர்.