தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சீர்காழி போன்ற பகுதிகளிலும் அதிகமான கனமழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மேற்கு – வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்க கூடும். இதன் காரணமாக சென்னை மற்றும் சில வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#ChennaiSnow trending, who else can bring you the data of similar days in the Chennai city and the reasoning. pic.twitter.com/Up2MzBn3H8
— Tamil Nadu Weatherman (@praddy06) November 21, 2022
சென்னையில் அதிகமாக காணப்படும் குளிரால் இது சென்னையா? இல்லை ஊட்டியா? எனக் கேட்கும் அளவிற்கு குளிர் மக்களை வதைத்து வருகிறது. இணையதளம் முழுவதும் பலரும் தற்போது குளிரான வானிலை நிலவுவதை தொடர்ந்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். தற்போது ட்விட்டரில் #chennai snow என்ற டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் பலரும் சென்னை ஊட்டி போல இருக்கிறது. ஊட்டி என்ன விலை என்று கேளு.. ஸ்விட்சர்லாந்து என்ன விலைன்னு கேளு.. என கூறும் அளவிற்கு வரிசையாக மீம்ஸ்களை போட்டு வருகின்றார்கள். அதில் முக்கியமானதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய facebook பக்கத்தில் போட்டுள்ள பதிவு இடம்பெற்றுள்ளது.