Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. “இது சீனா செஞ்ச வேலை தானா?”…. இந்திய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மிரம் தரோன் ( வயது 17 ) என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். அப்போது அவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அதாவது இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன வீரர்கள் அந்த சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவம், ஒருவேளை அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் வந்திருந்தால் சீனா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சீனாவோ இந்திய சிறுவன் மாயமானதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அதேபோல் சட்டத்திற்கு உட்பட்டு தான் சீன ராணுவம் எல்லைகளை கண்காணித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் நடவடிக்கைகளையும் ஒடுக்கி வருகிறது. ஆனால் இந்திய சிறுவன் மாயமானது தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Categories

Tech |