உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா பாணியில் திருடர்களை துரத்தி சென்று கைது செய்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், முகத்தை மூடி வந்த 2 மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் மாதவரம் உதவி ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியவர்களை காவலர் ரமேஷ் துரத்தி சென்று பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரை மீறி கொள்ளையர்கள் தப்பிச் சென்றதால் வாகனத்தை விட்டு கீழே இறங்கிய ரமேஷ், அவர்களின் பின்னால் ஓடி சென்று சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் திருடனில் ஒருவரை கைது செய்துள்ளா. மேலும் ஒருவர் தப்பி சென்றுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில் கொள்ளையர்களின் கூட்டாளிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சினிமாவில் நடப்பது போன்று நடந்து இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உதவி ஆய்வாளர் ரமேஷை பாராட்டியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் “இது எந்த படத்திலும் உள்ள சினிமா காட்சிகள் அல்ல நிஜ ஹீரோ உதவி ஆய்வாளர் ரமேஷ், இருசக்கர வாகனத்தில் சென்ற செல்போன் திருடர்களை கைது செய்த காட்சிகள்” என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
It’s not a scene from any movie. But the real life hero SI Antiln Ramesh single handed chasing and catching a mobile snatcher riding a stolen bike. Follow up led to arrest of three more accused and recovery of 11 snatched/stolen mobiles. pic.twitter.com/FJYdoma7I4
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) November 27, 2020