தேனியில் வயிற்றுவலியால் துடித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் மயிலாடுதுறையில் கனி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகள் நிவேதா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நிவேதா சில மாதமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் நிவேதா பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் வயிற்று வலி குறையாமல் தொடர்ந்து இருந்துகொண்டே வந்ததால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.
இதனால் நிவேதா மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்றதை பெற்றோர்கள் கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் நிவேதா வீட்டில் எவரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.