இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது.
இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்த முதலமைச்சர் கூறியதாவது. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது சமூக நீதிக்கு எதிரானது. ஏனென்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. இந்நிலையில் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340- வது பிரிவில் சமூக கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதே கூறப்பட்டுள்ளது.
அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என இதுவரை கூறி வந்த சிலர் இந்த இட ஒதுக்கீட்டை மட்டுமே ஆதரிக்கின்றனர். மேலும் இந்த இட ஒதுக்கீடு தொடர்ந்தால் சமூகநீதி உருக்குலைந்து போகும் என அவர் கூறியுள்ளார்.