Categories
மாநில செய்திகள்

இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்….. தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வுக்கு எதிரான மனு…. ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்….!!!!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

தேசிய அளவில் பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் national Eligibility Entrance test என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது கடந்த 2013-ஆம் ஆண்டு  முதல் நடுவண்  இடைக்கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்து 2019-ஆம் ஆண்டு முதல்  நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது. இந்த தேர்வில் இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய ஒவ்வொரு பாடத்தில் இருந்தும்  45 வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வானது மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஆனால் இந்த தேர்வில் கிராமப்புற மாணவர்கள்  தேர்ச்சி பெறுவது என்பது கடினமான ஒன்றாக உள்ளது.

இதனால் மன உளைச்சலில் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுப்பதற்காக நமது தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீட் தேர்வை கட்டாயமாகும் சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரீட் மனு  ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த மனுவில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் மனு விசாரணைக்கு உகந்தது என  உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |