விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிந்து இருப்பது கட்டாயம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முகக்கவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதி மீறலில் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்றும், கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Categories
இது கட்டாயம்…. விமானத்தில் ஏற்றாதீர்கள்…. ஐகோர்ட் அதிரடி..!!
