செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் போட்டியிடுறோம். நிச்சயமாக நாங்க நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உண்மை தானே.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள் ? ஆளுங்கட்சி என்ன பண்ணும் ? திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது என்ன பண்ணுவார்கள் ? 2006இல் பார்த்துள்ளோம் நாம். தெலுங்கு படத்தில் வர்ற மாதிரி கத்தியொடெல்லாம் ரோட்டில் அலைந்து இருக்காங்க. இதில் ஆளுங்கட்சி அதிக முறைகேடுகள் செய்யும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி உங்களுக்கு தெரியும்.
அதை மீறி போட்டிபோட வேண்டும். தேர்தல் என்பது போர்க்களம். அதில் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சி செய்வோம்.முறைகேட்டை தடுத்து நிறுத்தி, ஜெயிச்சு வர வேண்டும். இது போர்க்களம் சார்… தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம் அதில் சண்டை போட்டு தான் வர வேண்டும். அதை விட்டு ஒரு தேர்தலில் தோற்று விட்டால், இரண்டு தேர்தலில் தோற்று விட்டால் வீட்டில் போய் படுத்துக் கொள்ள முடியுமா ? இது பிசினஸா ? பூட்டி விட்டு செல்வதற்கு…. கடைசி மூச்சு வரை போராடுவோம் என்று நான் சொல்லித்தான் இருக்கேன்.