பிப்-14 ஆம் தேதி மட்டும் அல்லாமல் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக அதிகமாக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் பாஜக தனிப்பட்ட செல்வாக்கை தமிழகத்தில் பெற முயல்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் வருவதற்கு முன்பாகவே பிரதமர் மோடி சென்னை வர திட்டமிடப்பட்டு வருகிறது. இது ஒரு முறை மட்டும் அல்லாமல் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதி டெல்லியில் இருந்து காலை 7.30 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு காலை 10 மணிக்கு சென்னைக்கு வரும் மோடி காலை 11.15 மணிக்கு நேரு மைதானத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து மூன்று மணி நேரம் சென்னையில் பயணத்தை முடித்து கொண்டு மதியம் 1.30 மணி அளவில் கொச்சிக்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.