தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள சிவானந்தா மண்டபத்தில் வைத்து ஐயப்பசேவா சமாத்தின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ராஜகோபால துறைராஜா, மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் கமலம் நீலகண்டன், மாவட்ட தலைவர் சுந்தரராஜன், பொது செயலாளர் ராஜன், தேசிய செயலாளர் கணேசன், ஐயப்ப சேவா சமாத்தின் மாவட்ட உறுப்பினர் மதி, சுந்தர், செல்வமணி, அண்ணாமலை, கணேசன், கரூர்செல்வம், வெங்கடேஷ், காரைக்குடி கரிசாமி, செல்வராஜ் குருசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த 1923ஆம் ஆண்டு கேரளாவில் கோனகத்து ஜானகியம்மாள் இயற்றிய ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் மாதம் முதல் 2024 ஜனவரி வரை ஹரி வாசனம் நூற்றாண்டு விழா குழு அமைத்து கொண்டாடப்படுகிறது எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து சபரிமலை வரும் பக்தர்களுக்கு 60 கிலோ மீட்டர் தூரம் ஒன்றிற்கு அன்னதான கூடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.