Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இது எப்போ இடிஞ்சு விழும்னே சொல்ல முடியாது… பொதுமக்கள் அச்சம் … அதிகாரிகளுக்கு கோரிக்கை ..!!

நாகையில் பழுதான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாகை மாவட்டம் சேஷமூலை ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி 30,000 கொள்ளளவு கொண்டது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால் ரூ.30,800 செலவில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடிநீர் தொட்டியிலிருந்து பிள்ளையார் கோவில் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது.

இதனால் அப்பகுதியில் நடமாடும் மக்கள் எச்சரிக்கை உடனே செல்ல வேண்டியதாக இருக்கிறது. மேலும் சிறுமிகள், சிறுவர்கள் அப்பகுதியில் விளையாண்டு கொண்டிருப்பதால் குழந்தைகளின் பெற்றோருக்கு இந்த தொட்டி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அப்பகுதி மக்கள் மோசமான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய நீர் தொட்டி கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |