நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரை சேர்ந்த ஜென் வெட்டிங் எனும் நபர் சில நாட்களாக காதுக்குள் வித்தியாசமான உணர்வை அனுபவித்து வந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு காது நிபுணர் ஜென்னை பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது காதில் பூச்சி ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
அதனை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு பிரத்தியேக கருவி மூலம் காதுக்குள் இருந்து அந்த பூச்சி வெளியே எடுக்கப்பட்டது. அது வேறு ஒன்றும் இல்லை கரப்பான்பூச்சி தான். இது எப்படி காதுக்குள் சென்றது என்பது ஜென் வெட்டிங்க்கு தெரியவில்லை. அவர் தூங்கும்போது சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.