Categories
சினிமா தமிழ் சினிமா

இது என்ன புது பிரச்சன….! விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் ரிலீஸ் ஆகுமா?…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!

“வீரமே வாகை சூடும்” திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் விஷால். இவர் இறுதியாக நடித்த படம் “எனிமி”. இது நல்ல ஆதரவை பெற்றது. தற்பொழுது அவர் “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தை சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி  தயாரித்திருக்கிறார். ரிலீஸுக்காக காத்திருக்கும் இத்திரைப்படம் தற்போது ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. விஷால் இத்திரைப்படத்தை தயாரிப்பதற்காக லைகா நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியுள்ளார்.

தற்பொழுது விஷாலிடம் கொடுத்த கடன் தொகையை தருமாறு லைகா நிறுவனம் கேட்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் விஷால் தற்போது பணத்தை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. ஆகையால் லைகா நிறுவனம் விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒரு கால்சீட் கொடுக்குமாறு கேட்டிருக்கிறது. விஷாலும் கால்சீட் கொடுப்பதாக கூறியுள்ளார். லைகா நிறுவனத்துக்கு விஷால் டேட் தரவில்லை. இதனால் லைகா நிறுவனம் “வீரமே வாகை சூடும்” படம் ரிலீஸுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது “வீரமே வாகை சூடும்” படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா? என்ற ஐயம் ஏற்படுகிறது. விஷாலும் லைகா நிறுவனமும் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |