Categories
தேசிய செய்திகள்

“இது என்ன புதுசா இருக்கு” மக்களே உஷார்…! ரொமான்ஸ் மோசடி நடக்கு…. FBI எச்சரிக்கை…!!!

காதல் என்ற பெயரில் அமெரிக்காவில்
சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக FBI கூறியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வகையான மோசடியை ரொமான்ஸ் மோசடி என்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் மெதுவாக பேச்சுக் கொடுத்து அவரின் அன்பையும் காதலையும் பெறுவதுதான் இவர்களில் முதல்கட்ட நோக்கம்.

தொடர்ந்து அவர்களிடம் பேசி மெதுவாக அந்த குறிப்பிட்ட நபரிடம் உள்ள பணத்தை ஏமாற்றி பறித்து விடுகின்றனர். சமூக வலைதளங்களில் ஒரு நபரிடம் அன்பாக பேசுவது பின்னர் அவர்களின் மனதைக் கவர்ந்து அவர்களை காதல் வலையில் சிக்க வைப்பது, தொடர்ந்து நேரில் சந்திக்கலாம் என கூறி அவர்களிடம் உள்ள பணத்தை சுருட்டி விட்டு அங்கிருந்து தப்பி விடுவது தான் இந்த கும்பலின் வேலை. எனவே சமூக வலைத்தளங்களில் உள்ள போலிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி எஃப்பிஐ கூறியுள்ளது.

Categories

Tech |