பழனி காரைமடை பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். டெய்லரான இவர் தனது வீட்டில் பல்வேறு மலர் செடிகளை தொட்டிகளில் நட்டு வைத்து பராமரித்து வருகின்றார். இதில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட பிரம்ம கமலம் செடியும் இருக்கிறது. தற்போது இந்தச் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அதாவது இரவில் மட்டுமே மலரும் இந்த பூக்கள் பகலில் வாடி விடுகின்றது தற்போது அவரது வீட்டுச் செடியில் எட்டு பூக்கள் பூத்திருக்கின்றது. மேலும் இந்த பூக்களை அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றார்கள்.
Categories
இது என்ன அதிசய பூ?…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!
