ஒப்ராவின்ஃப்ரே முன்னெடுத்த ஹரி மேகன் தம்பதியிடம் நேர்காணலில் தான் ஹரியிடம் பேசப் போவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்தார்.
இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி சகோதரர்கள், இவர்களிடம் கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை இல்லை. இந்த ராஜ வம்சத்து ஏற்பட்ட குழப்பத்தினால் பிரித்தானிய அரசு குடும்பத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தார் மீது இனரீதியாக பாகுபாடு செய்கிறார்கள், என்ற குற்றச்சாட்டு வைத்ததற்கு ,அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பிரித்தானிய ராஜ குடும்பத்தார் இனரீதியான பாகுபாடு கொண்டிருப்பதில்லை என இளவரசர் வில்லியம் வெளிப்படையாக கூறினார்.
ஒப்ராவின்ஃப்ரே நேர்காணல் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் இதைப்பற்றி நான் இன்னும் என் சகோதரருடன் பேசவில்லை என்றும் ,ஆனால் கண்டிப்பாக என் சகோதரரிடம் பேசுவேன் என்றும் அது என்னுடைய கடமை ஆகும் என்று வில்லியம் தெரிவித்தார்.ஆனால் வில்லியம் ஹரி- மேகன் திருமணத்தை கடுமையாக எதிர்த்தார் என்றும், இதனால் ஹரியை திட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியது. மேகன் மெர்க்கல் பிரச்சனையால் இளவரசர் வில்லியம் ஹரியின் மீது மனக்கசப்பு ஏற்பட்டு பெரிய விரிசலாக மாறியது .சமீபத்தில் நடந்த ஒப்ரா நிகழ்ச்சியில் ஹரியிடம் பேச இருப்பதாக வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை.