நடிகர் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நலன் விரும்பிகள், திரைப் பிரபலங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
. குறிப்பாக ரசிகர்களுக்கும் அவர்களின் அளவற்ற அன்புக்கும் நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்குப் பக்க பலமாக ஒரு தூணாக இருந்து என்னை ஆதரிக்கின்றனர். நீங்கள் காட்டும் அன்பால் நெகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.