Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எங்களோட கோட்டை…! என்னை மிரட்ட முடியாது.. திமுகவுக்கு SP வேலுமணி சவால் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அம்மா இருக்கும்போதும் சரி,  அண்ணன் எடப்பாடி யார் இருக்கும்போதும் ச, ரி ஓபிஎஸ் அண்ணனுடைய உறுதுணையுடன் என்னென்ன திட்டம் தேவையோ எல்லா திட்டமும் கொடுத்தோம். மிகப்பெரிய வளர்ச்சி கொடுத்திருகின்றோம். அதிகமான பாலங்கள், சாலைகள், கூட்டு குடிநீர் திட்டங்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்று பல்வேறு வளர்ச்சி கொடுத்து இருக்கிறோம். மிகப்பெரிய வளர்ச்சி நாம கொடுத்திருக்கிறோம். இந்த பத்து வருஷத்துல… 10 ஆண்டு காலத்தில்  அண்ணன் எடப்பாடியார் அத்திக்கடவு அவிநாசி திட்டம்  செய்து கொடுத்தார்.

இப்படி பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் 8 மாத காலமாக திமுக அரசு எதுவுமே செய்யல. மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுக்குறோம். அந்த வளர்ச்சியின் காரணமாக கண்டிப்பாக கோவை மாவட்டம் என்றைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய கோட்டை,  அம்மாவினுடைய கோட்டை. மீண்டும் அதை நிரூபிக்கனும். கண்டிப்பாக மேயர் மற்றும் அனைத்து நகராட்சிகள் பேரூராட்சிகள் எல்லாம் கண்டிப்பாக அண்ணா திமுக மீண்டும் கைப்பற்றும்.

திமுக அரசு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து மிரட்டுவதை  மட்டும்தான் செய்யறாங்க. மக்களுக்கு எதுவுமே பண்ணல. அண்ணா திமுக அமைச்சர்கள் மேல் வழக்கு போடுவது, இப்போ அதுக்கு கூட இறங்கிட்டாங்க. பஞ்சாயத்து தலைவருக்கு போயிட்டாங்க. ஒன்றிய செயலாளர், பஞ்சாயத்து தலைவர்களை எல்லாம் விஜிலன்ஸ் விட்டு மிரட்டுர அளவுக்கு போய்ட்டாங்க. ஆனா இது மட்டும் தான் நடக்குது. என்னை மிரட்ட முடியாது என தெரிவித்தார்.

Categories

Tech |