கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பந்தமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது ரொனால்டோ எட்டி உதைத்த பந்து பார்வையாளர்கள் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவனின் கையில் விழுந்தது. இதனால் சிறுவன் வலியில் அலறித் துடித்துள்ளார். ஆனாலும் அந்த சிறுவன் ரொனால்டோவின் தீவிர ரசிகனாக இருந்ததால் போட்டி முடியும் வரை காத்திருந்து பார்த்தார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த ரொனால்டோ ஒட்டுமொத்த ஆட்டக்காரர்களின் கையெழுத்து போடப்பட்ட ஜெர்சியை அந்த சிறுவனுக்கு அனுப்பி வைத்து நலம் விசாரித்துள்ளார்.