முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை ஆகும். ஒரு அமைச்சராக நான் எனது கடமையை செய்த நிலையில், ஆணைய அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. தனக்கும் ராதா கிருஷ்ணனுக்கும் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. ஆகவே குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்