கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலாடி அருகிலுள்ள டி.மாரியூர் ஊராட்சி மடத்துக்குளத்தில் பொது கண்மாய் உள்ளது. அந்த கண்மாயியை பலரும் ஆக்கிரமித்து உப்பளம் அமைத்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து இந்த கண்மாய் பொதுமக்கள் அனைவர்க்கும் சொந்தமானது என்றும், கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் விடுதலை சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாநில பொதுச் செயலாளர் கனியமுதன், பாராளுமன்ற செயலாளர் கோவிந்தராஜ், தொகுதி செயலாளர் பழனி குமார், சத்யராஜ் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.