Categories
உலக செய்திகள்

இதுவரை யாரும் கண்டிடாத… அரிய வகை ஆப்பிரிக்க காட்டு கழுதை…!!!

சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகள் உள்ளன.

சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ‘Lucrecia’ மற்றும் ‘Ita’ என்ற பெயர் கொண்ட அந்த 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மிருக காட்சி உரிமையாளர் தெரிவித்தார். இந்த வகை இனங்கள் கழுதை போல உடலமைப்பு கொண்டிருந்தாலும் அதன் கால்களில் வரிக்குதிரைக்கு இருப்பது போல் ஏராளமான கோடுகள் இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதன் காரணமாகத் தான் ஆப்பிரிக்க காட்டு கழுதைகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டு அதன் இனம் அழியும் தருவாயில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 200 ஆப்பிரிக்க காட்டு கழுதைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |