3,6,9 என்ற படத்தில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் கிறிஸ்துவ பாதிரியாராக நடித்துள்ளார். இதுகுறித்து 3,6,9 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது: “திரையில் வருபவர்கள் மட்டும்தான் ஹீரோவா? கதை, திரைக்கதை எழுதியவர்கள் எல்லாம் ஹீரோ இல்லையா? திரைக்குப்பின்னால் பணியாற்றியவர்கள் அனைவரும் ஹீரோ தான். இதுவரை நான் பாதிரியாராக நடித்தது இல்லை. இந்த படத்தில் கிறிஸ்டியன் பாதிரியாராக நடித்தது புதிதாக இருந்தது. விமர்சனம் செய்வதற்காகத் தான் நாம் படமே எடுக்கிறோம். எவ்வளவு கடினமாக விமர்சனம் செய்தாலும் அதை நாம் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Categories
இதுவரை நான் இப்படி நடித்ததே இல்லை….. பாதிரியார் ஆன பாக்யராஜ்….!!!
