Categories
தேசிய செய்திகள்

இதுவரை எந்த ஆவணங்களும் கைப்பற்றவில்லை…. சிபிஐ ரெய்டு சுவாரஸ்யமானது…. ப.சிதம்பரம் போட்ட ட்வீட் பதிவு…!!!!!!!!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடர்புடைய  சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு  நடத்தி வருகின்றனர். மேலும் சிதம்பரத்தின்  மகன்  எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக ப.சிதம்பரம்  தனது ட்விட்டர் பதிவில் சென்னை, டெல்லியில் உள்ள எனது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால் அவர்கள் காட்டிய எஃப்ஐஆரில் என்னுடைய  பெயர் குறிப்பிடப்படவில்லை. சோதனை முடிவில் வீட்டிலிருந்து தேடுதல் குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை, என்றும் எதையும் கைபற்றவில்லை என்றும் தெரிவித்தார்.ஆனால் ரெய்டு நடைபெறும்  நேரம் சுவாரசியமானது என பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |