Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதுல 2 பேருக்கு மேல ஏற்ற கூடாது…. எல்லாத்தையும் கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க…. காவல் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டை காவல் நிலையத்தினுள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுக்கான கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு சிலவிதமான கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவையலிருக்கும் காவல் நிலையத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை வகித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

மேலும் இதில் வேன், ஆட்டோ டிரைவர்கள், கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துரையாடிய இன்ஸ்பெக்டர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் வழங்க வேண்டும் என்றும், ஆட்டோவில் 2 நபர்களுக்கு மேல் ஆட்களை ஏற்றக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |