Categories
அரசியல்

“இதுல தமிழகம் 3-வது ப்ளேஸ்ல இருக்காம்”….! துரைமுருகனை புகழ்ந்து தள்ளிய முதல்வர்…. என்னனு பாருங்க….!!!

நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்ததை தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து மு க ஸ்டாலின் வாழ்த்தினார்.

ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை ஜல்சக்தி துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் உத்திரபிரதேச மாநிலம் முதல் இடத்தையும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

சிறந்த கிராம பஞ்சாயத்து (தென்மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3வது இடத்தையும், சிறந்த பள்ளிகள் இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விருது அறிவிக்கப்பட்ட தகவலை தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது முதல்வர் ஸ்டாலின், நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, பள்ளிக் கல்வித் துறை, தொண்டு நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Categories

Tech |