தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால் மாநில அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கள் என பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், வேலைகள் தொடங்குவதற்கு முன்பு லெவல் எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்டிய பிறகு முறையாக வடிகாலில் நீர் செல்லவில்லை என்றால் அதற்கு சம்பந்தப்பட்ட உதவி மற்றும் முதன்மை பொறியாளர் தான் பொறுப்பு. உரிய விதிமுறைகளின் படி படி கால்களின் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் முறையான தடுப்புகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பணியை நிறைவேற்றும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் வடிகாலில் அனைத்து நுழைவாயில்களுக்கும் சரியான சாய்வு மற்றும் கை தண்டவாள ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட JE/AE ஆகியோர் பொறுப்பாவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.