Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுலாம் தேவையா?…. சவால் விட்ட ருதுராஜ்…. அணி மீட்டிங்கில் பங்கம் செய்த தோனி….!!!!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக தயாரானது. தொடர்ந்து 4 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அப்போது ருதுராஜ் அணி மீட்டிங்கில், “நான் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். இதனால் ருதுராஜ் மீது பயிற்சியாளர் பிளெமிங், ஜடேஜா, மகேந்திர சிங் தோனி போன்றவர்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ருதுராஜ் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை. 17(16) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ஷிவம் துபே 96(46), உத்தப்பா 88(50) ஆகியோரது அதிரடியான விளையாட்டால் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த அணி மீட்டிங்கில் பேசிய மகேந்திரசிங் தோனி, “ருதுராஜ் தான் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை, எனவே அணியிலிருந்து நீக்கிவிடலாமா” என்று சிரிக்காமல் பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “பரவாயில்லை பொதுமன்னிப்பு வழங்கி விடலாம்” என்று கூறியுள்ளார். அதனை கேட்ட ருதுராஜ் உட்பட அனைவரும் சிரித்துள்ளனர். இனிமேல் அணி என்ன செய்ய வேண்டும் ? என்பது பற்றிய திட்டங்கள் குறித்து அணி மீட்டிங்கில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |