விஜய்யின் சிறுவயதில் ஏற்பட்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
முன்னணி நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் பிரபல இயக்குனரும் ஆவார். முதலில் விஜய் நடிப்பில் ஆர்வம் இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சி மறுத்திருக்கிறார். விஜய் விடாப்பிடியாக முயற்சித்ததால் விஜய்க்கு திறமை இருக்கின்றது என படங்களில் நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி. மேலும் இவர் தனது சொந்த படத்திலேயே பல படங்களில் நடிக்க வைத்தார். விஜய்யும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
எஸ்.ஏ.சி தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி புதுப்புது தகவல்களை கூறி வருகின்றார். இது பலர் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் விஜய் பற்றிய ஒரு தகவலை கூறி இருக்கின்றார். அது என்னவென்றால் விஜய் எப்போதுமே அமைதியாக இருப்பார். அது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஊசி போடுவதென்றால் விஜய்க்கு கத்தி கத்தி அழுவார். அவ்வளவு பயமாம். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு அப்படி அழுவார். ஊசின்னா விஜய்க்கு அவ்வளவு பயம் என்று கூறியுள்ளார்.