ராணி மேரி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசிய போது, முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் உள்ள அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றார். இந்த கல்லூரி 33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது.
ஆனால் இன்று இந்த கல்லூரியில் 5,000 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாகும். தந்தை பெரியார், கலைஞர், பெருந்தலைவர் காமராஜர், அண்ணா போன்றவர்கள் எல்லாம் உருவாக்கிய மாற்றம் இது தான். மேலும் இந்த மாற்றம் பட்டத்தோடு நின்று விடாமல் இன்னும் பல பட்டங்களை பெற்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.