Categories
மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா?…. தி.மு.க.வில் இருந்து விலகும் தலைவர்கள்….. விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

எதிர்க்கட்சித் தலைவரான  எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்

கோவையில் உள்ள விமான நிலையத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. நான் டெல்லியில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்தேன். அதில் முக்கியமானது நமது தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவு நிலையில்   உள்ளது.

இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாத காலத்திலேயே அதன் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுகின்றனர். இதுதான் திராவிட மாடல் மற்றும் ஆட்சியின் சாதனை என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |