அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள Kennesaw என்ற இடத்தில் மின்கம்பியில் உராய்ந்தபடி சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறிய ரக விமானம் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் வந்து மோதுவதும், மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாவதையும் கேமராவில் சிக்கிய காட்சியில் பார்க்கலாம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் விமானத்தை ஓட்டி வந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், விமானத்திலிருந்து தானாகவே வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானி அவசர அவசரமாக விமானத்தை தரை இறக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் அந்த விமானம் உராய்ந்து சாலையில் விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து மின்துறை ஊழியர்கள் மின்கம்பியை சரி செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Plane crash caught on Natasha Williams’ dash cam on Cobb Parkway in Kennesaw, GA earlier. Video taken by Natasha Williams. pic.twitter.com/Ajo7mB7pKd
— Chad (@ChadBlue83) April 7, 2022