Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“இதுதான் கர்மா”…. அக்தரை கிண்டலடித்த ஷமி…. நாமெல்லாம் கிரிக்கெட் ஆடுறோம்…. வெறுப்பை பரப்ப வேண்டாம்…. அப்ரிடி அறிவுரை..!!

இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை பரப்ப வேண்டாம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஷமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்..

2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சோயப் அக்தர் ட்விட்டரில் இதயம் உடைந்த எமோஜியை பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த ஷமி, “மன்னிக்கவும் சகோதரா. இது தான் கர்மா” என்று பதிலடி கொடுத்தார்.

அடிலெய்டில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் தகுதியில்லை என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவை சாடிய அக்தருக்கு ஒரே வார்த்தையால் நீங்கள் சொன்னது உங்களுக்கே வந்துவிட்டது என்பதுபோல பதிவிட்டுள்ளார்.

ஷமியின் பதிலை பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் அப்ரிடி உள்ளிட்ட அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் “கர்மா” ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஷாகித் அப்ரிடி முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை பரப்ப வேண்டாம் எனவும் கூறினார்.

இதுகுறித்து அந்நாட்டு சாமா டிவியில் அப்ரிடி பேசியதாவது, “நாம் கிரிக்கெட் வீரர்கள், தூதர்கள் போன்றவர்கள். இரு நாடுகளுக்கும் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) இடையே உள்ள விரிசலை முடிவுக்குக் கொண்டுவர நாம் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். மக்களிடையே வெறுப்பை பரப்பும் இதுபோன்ற விஷயங்களை செய்யக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.இதுபோன்ற செயல்களைச் நாம் செய்யத் தொடங்கினால், சாமானியர்களிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?. நாம் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் விளையாட்டு தான் எப்போதும் நம் (இந்தியா – பாகிஸ்தான்) உறவை சிறப்பாக வைத்திருக்கும். அவர்களுக்கு எதிராக விளையாட விரும்புகிறோம், பாகிஸ்தானில் விளையாடுவதை அவர்கள் பார்க்க விரும்புகிறோம். நீங்கள் ஓய்வு பெற்ற வீரராக இருந்தாலும், இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது. தற்போது அணியுடன் விளையாடுகிறீர்கள், இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்,” என்று கூறினார்.

அதே சமயம் அக்தர் கிண்டலடித்ததால் தான் ஷமி பதிலடி கொடுத்தார் எனவும், அறிவுரை கூறுவதென்றால் முதலில் அப்ரிடி அவரது நாட்டு வீரருக்கு தான் சொல்லவேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |