சாலையில் சென்ற காரின் மீது மின்னல் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது
அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் மாகாண நெடுஞ்சாலையில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி இரண்டு குழந்தைகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று அந்த காரை தாக்கியது. மின்னல் தாக்கினாலும் காரில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு அந்த வாகனத்தின் டிசைன் அமைக்க பெற்றிருந்ததால் உள்ள இருந்தவர்களுக்கு எதுவும் ஆகவில்லை.
காரின் மீது மின்னல் தாக்கியும் 8 மாத குழந்தை உட்பட மொத்த குடும்பமும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மின்னல் தாக்கிய சம்பவம் அந்த காரின் பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.