உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கார்ட்டூன் என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாகும். அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று தாங்களும் மாறவேண்டும் என ஏராளமான குழந்தைகள் விரும்புவார்கள். இந்நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த லியாங் கியோ (11) என்ற சிறுவன் தான் ஒரு சூப்பர்மேன் போன்று இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்புகிறார். ஆனால் அந்த சிறுவனுக்கு திடீரென மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் லியாங் கியோவின் பெற்றோர் அவரிடம் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளனர். அந்த சிறுவன் சிறிது நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிவிட்டதால் சிறுவனுக்கு பிடித்தவற்றை எல்லாம் அவருடைய பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர்.
இந்நிலையில் திடீரென அந்த சிறுவனுக்கு தான் இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன் என்பது தெரியவந்துள்ளது. இதனால் லியாங் கியோ தன்னுடைய தாயிடம் தான் ஒரு சூப்பர் மேனாக இருந்து இந்த உலகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறேன். அதனால் நான் இறந்த பிறகு என்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள் என கூறிவிட்டார். மேலும் அந்த சிறுவன் 2 வருடங்கள் கழித்து திடீரென இறந்துவிட்டார். இதனால் அந்த சிறுவனின் தாயார் தன்னுடைய மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து விட்டார். மேலும் அந்த சிறுவன் இறந்தபோது மருத்துவமனையில் பணியாற்றிய அனைவரும் சிறுவனுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.