பியூட்டி பார்லர் செல்ல கணவர் பணம் தராததால் மனைவி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த அமித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியும், தனக்குத் தேவையான ஜீவனாம்சத் தொகையை பெற்று தரக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண் தனக்கு பியூட்டி பார்லர் செல்லவும், வீட்டு செலவுகளுக்கும் தேவையான பணத்தை அவர் தரவில்லை. இதனால் எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட நீதிபதி இருவரையும் கவுன்சிலிங் செல்ல அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.